தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்கு உணர்த்தல்:
"உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்பெருந்துறைப் பிள்ளைகள்ஆர்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்குஎன் னோஐய ஓதுவதே".
[உருகும் அடியார்தம் உள்ளத்தும் அம்பலத்தும் ஒளிமிக ஆடும் சிவபெருமானின் பெருந்துறை என்ற நகரைச் சார்ந்த தலைவிக்குத் தலைமயிர் கூட்டி முடிக்கும் அளவிற்கு இன்னும் வளரவில்லை; நகில்களும் முகம்செய்யவில்லை. அவ்வாறான இளையாளாகிய தலைவிக்கு யான்சென்று ஓதும் செய்தி உண்டோ?]
தலைவன் தலைவி வருந்தியவண்ணம் உரைத்தல்:
"அளைதாழ் அரவும் அரியும்வெந் தீயும் அரசும்இங்ஙன்
இளைதா யினும்கொல்லும் என்பது நீவந்து இருஞ்சுரும்பின்
கிளைதாழ் குழல்வஞ்சி கேட்டிலை யோஇளங் கிள்ளைமென்சொல்
முளைவாள் நகைப்பெண் அரசுஅல்லவோ அந்த மொய்குழலே".
[வண்டுகள் படியும் குழலைஉடைய வஞ்சியே! பாம்பும், சிங்கமும், நெருப்பும் அரசும் இளைய ஆயினும் கொன்று விடும் ஆற்றல்உடையன என்பதை நீ அறியாயோ? கிள்ளை மொழி வெண்பல் தலைவி பெண்அரசு அல்லளோ? அவள் வாட்டும் திறம் சிறிதோ?]
பாங்கி தலைவி செவ்விஅருமை செப்பல்:
"கற்றில கண்டுஅன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
பெற்றிலமென் பிணைபேச்சுப் பெறாகிள்ளை பிள்ளைஇன்றொன்று |
|
|
|