[உன்னை வருத்திய தலைவி எனக்கு உயிர்; யானும் அவளுக்கு உயிர்;
ஆதலின் நீ கொய்துவந்த தழைஆடையும் குவளைப்பூக்களும் கைகளில் நின்று கருகிச் சோருமாறு வருந்தாதே.]
"தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்கு
ஏலாப் பரிசுஉள வேஅன்றி ஏலேம் இருஞ்சிலம்ப
மாலார்க்கு அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில்
கோலாப் பிரசம்அன் னாட்குஐய நீதந்த கொய்தழையே".
[திருமால் காணமுடியாத திருவடிகளையுடைய அம்பலத்தான் மலையில் நீ தரும் தழை ஆடையை, வண்டுகள் தேடிச் சேர்க்காத இயற்கையாகிய தேனைப் போன்ற தலைவிக்கு யான் ஏற்பது எம்குடும்பச்சிறப்பிற்கு ஏலாது எனினும், நீஎமக்குத்தீங்கு செய்யவந்த யானையை வென்றதனையும், நீ எம்மிடம் அன்புபூண்டு எம்மைவிட்டு நீங்காது துவளும் வருத்தத்தினையும் உட்கொண்டே ஏற்றுக் கொள்கிறோம்]
"உறாஅ தவர்போல் உறினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்"
"மொய்ம்மால் வரைஎன்ன விம்மா எழும்என் முகிழ்முலைக்கு
நம்மால் வரைவினை நாள்தொறும் சொல்லி நலம்சிறக்க
எம்மால் ஒருபயன் ஏலாது அருந்தழை ஏற்றசெங்கை
மைம்மான் விழிக்குஒரு கைம்மாறு கண்டிலம் வையகத்தே"
|
|
|
|