398                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 சுறவுஆர் கொடிஉயர்த் தோன்தொண்டை மான்கப்பல் சூழ்திருநாட்டு
 உறைவார் தமக்குஇது வும்தகு மோசொல்லு ஒண்ணுதலே

                                                      கப்பல். 104

 எனவும்,

     [தோழி! உலகில் மீனக்கொடியை உயர்த்த தொண்டைமானது கப்பலைச்
 சூழ்ந்த நாட்டில் இதுவரை ஏற்படாத பழி ஒன்று நமக்கு ஏற்படுவதுபோலும்.
 நமக்கு இத்தகைய பழி தருவதா? சொல்லுவாயாக]

     பாங்கி என்னை மறைப்பது என்எனத் தழாஅல்:

 "மஞ்சுஅறி யாமின்னும் வான்அறி யாதமருந்தும்மற்றுஉன்
  நெஞ்சுஅறி யாதநினைவும்உண் டோநெடு நீர்உலகில்
  நஞ்சுஅறி யாஅன்பின் நல்லவர் ஊட்டினும் நாணியசெம்
  பஞ்சுஅறி யாத பனிமலர்ச் சீறடிப் பைந்தொடியே"

                                                      அம்பி. 140

 எனவும்,

     [வஞ்சனை அறியாத தோழியர் செம்பஞ்சு தீட்டினும் மென்மையால்
 நாணுதலால் செம்பஞ்சே தீட்டி அறியாத மலர்ச் சீறடித் தலைவியே!
 மேகம்அறியாத மின்னலும், தேவர் அறியாத அமுதமும், உன்மனம்
 அறியாத என்நினைவும் இவ்வுலகில் உண்டோ?]

     பாங்கி கையுறை புகழ்தல்:

 தெவ்வரை மெய்எரிகாய்சிலை ஆண்டு என்னைஆண்டுகொண்ட
 செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
 அவ்வரை மேலன்றி இல்லைகண் டாய்உள்ள வாறருளான்
 இவ்வரை மேல்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே"

                                                 திருக்கோவை 114

 எனவும்,