தோழி தலைமகன் குறிப்புவேறாக நெறிப்படக் கூறல்:
மேவிஅந் தோல்உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யில்கையில்
ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்று உரைஉளதால்
தூவிஅந் தோகைஅன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான்
பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே
[மயிலனையாய்! புலித்தோல் உடுக்கும் சிவபெருமான் பூசும்
வெண்ணீற்றை மெய்யில்பூசி, உன்வடிவு கொண்ட துணியைக் கையில்
கொண்டு யாருடனும் உரையாடாதிருக்கும் தலைவன் மடல்ஏறத் துணிந்து விட்டான் போலும்! என்ன பாவம்! பெரிதும் இரங்கத் தக்கான்.]
"உள்ளப் படுவன உள்ளி உரைத்தக் கவர்க்குஉரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க்கு அருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப் படாது மறப்பது அறிவுஇல்என் கூற்றுக்களே"
[கள்ளமனத்தவர்க்கு அருளாத சிவபெருமானுடைய தில்லையைத் தரிசிக்காதவர் சொற்கள் கொள்ளத் தகாதன ஆவது போல அறிவுஅற்ற என்சொற்களைக் கொள்ளாது மறந்து, நினைக்கத் தக்கனவற்றை நீயே
நினைத்து, உரையாடத்தக்க மேம்பட்ட தோழியரோடு உரையாடி நீ பொய்
என்று கருதிய இதனை மெள்ளத் துணிவாயாக]
தலைவி பாங்கி தன்னை முனிதல்:
"வாளாது வந்துஎனை வந்தன சொல்லி மணிவரைவேய்த்
தோளாய் புலந்து துயர்வதுஎன் னோதொன்று தொட்டுவந்துஇந்
|
|
|
|