நாளாக ஒன்றி நயந்தநம் கேண்மையில் நாளும்உன்சொல்
கேளாதனவும் உண்டோஎன் கொலோஎன்னைக் கேட்கின்றதே
[வேய்த்தோளாய்! ஒருதேவையு மின்றி என்னிடத்து வந்து மனம்போன
போக்கில் பேசி என்னை வெறுத்து நீ வருந்துவது எதற்கு? தொன்றுதொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் நட்பில் நீ சொல்லி யான் கேளாத செய்தி ஏதேனும் உண்டோ? அவ்வாறாக என்னை நீ கேட்பது எதனுக்கு?]
தலைவி பாங்கி தன்கைக் கையுறை ஏற்றல்:
"தீதுஆகில்என் அன்றி நன்று ஆகில்என் திண்சிலம்பர் தந்த
போதுஆர் தழையும்புது நறுங்கண்ணியும் பூங்குவளைத்
தாதுஆர் மலர்க்குழல்தையல் நல்லாய்வையம் சாற்றுவன
யாதாகில் என்வந்து நின்கையது ஆனதின்று என்கையதே"
[தோழி! தீதாகில் என்ன? நன்றாகில் என்ன? உலகம் யாது கூறில்
என்ன? சிலம்பன் நின்னிடத்துத்தந்த தழையும் கண்ணியும் யான் இன்று பெற்றுக்கொள்கிறேன்]
இறைவி கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல்:
"பாசத்தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந் தனசென்று யான்கொடுத்தேன்
பேசில் பெருகும் சுருங்கும் மருங்குல் பெயர்த்து அரைத்துப்
பூசிற் றிலள்அன்றிச் செய்யாதன இல்லை பூந்தழையே"
|
|
|
|