அகத்திணையியல்-நூற்பா-137                             403 


 

     [கயற்கண்ணியே! வா! அச்சத்தைப் போக்கி அருளும் பார்வதி
 பாகனான சிவபெருமான் மலையில் உள்ள தண்புனத்தில் முதலில்
 ஊசல்ஆடிப் பக்கத்துக் குன்றில் நின்று விழும் அருவியில் நீராடுவோம்]

    குறியிடத்து உய்த்து நீங்கல்:

 "நால்வேய் இனம்நின தோட்குஉடைந்து உக்கநன் முத்தம்சிந்திப்
  பரல்வேய் அறைஉறைக் கும்பஞ்சு அடிபரன் தில்லைஅன்னாய்
  வரல்வேய் தருவன்இங் கேநில்உங் கேசென்றுஉன் வார்குழற்குஈரங்
  குரல்வேய் அளிமுரல் கொங்குஆர் தடமலர் கொண்டுவந்தே

                                               திருக்கோவை 1119

 எனவும் வரும்

     [செம்பஞ்சு ஊட்டிய அடிகளைஉடைய, சிவபெருமான் தில்லையை
 ஒப்பாய்! உன்தோள் அழகுக்கு உடைந்த மூங்கில்களிலிருந்து தெறித்த
 முத்துக்கள் பருக்கைக் கற்களைப் போல உன் அடிகளுக்குத் துன்பம்
 தரும் ஆதலின் நீ என்னுடன் வருதல் வேண்டா; இங்கேயே நில்; யான்
 அப்பக்கம் சென்று உன் நீண்ட கூந்தலில் சூட்டுதற்கு ஆகும் வண்டு
 மொய்க்கும் நறுமண மலர்களைக் கொய்து உன்னிடம் வந்து சேருகிறேன்.]

     ஒன்றென முடித்தலால், நீங்கும் தோழி தலைவற்கு உணர்த்தலும்
 வரவும் பெறும்.

     அதற்குச் செய்யுள்:

 "பனிஏர் நறுமலர்ப் பாயலில் கண்வளர் பாவைஒரு
  தனியே கிடந்துஅழும் தாயும்இங்கு இல்லை தடஞ்சிலம்பர்
  முனியேல் விடைகொள்வன் முற்றும்நின் காவல் மூகிழ்நகைச்செங்
  கனியே அனையசெவ் வாய்நவ்வி மான்விழிக் காரிகையே"

                                                     அம்பி. 153

 எனவரும்.

     [சிலம்பா! நறுமலர்ப் பாயலில் படுத்து உறங்கும் பாவை போன்ற
 தலைவி தனிமையை நினைத்தால் அழுவாள்.