404                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     உடன் உறையத் தாயும் இல்லை. இம்மான்விழிக் காரிகை இனி முழுதும்
 உன்காவலினள் ஆவாள். இங்ஙனம் உன்னை அவளைக் காக்குமாறு
 பணிப்பதற்காக என்னை வெகுளாதே; நான் விடைகொள்கிறேன்.]

     இறையோன் இடத்து எதிர்ப்படுதல்:

 "படமா சுணப்பள்ளி இக்குவடு ஆக்கிப் பங்கயக்கண்
  நெடுமால் எனஎன்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே
  இடமா இருக்கல்உற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
  வடமார் முலைமடவாய்வந்துவைகிற்றிவ்வார் பொழிற்கே

                                                திருக்கோவை 120

 எனவும்,

     [இம்மலைப்பகுதியை ஆதிசேடனாகிய படுக்கை என்றும் என்னைத்
 திருமால் என்றும் கருதியோ, என்மனமாகிய தாமரையில் தங்கலாம் என்று
 விருப்பம்கொண்டோ, தில்லையான் கயிலையைப் போன்ற
 முலைகளையுடையாய்! இப்பொழிற்கண் நீ வந்து தங்கியுள்ளாய்? நீ வந்த
 காரணம் தான் யாதோ?]

     இயைதல்:

 "செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
  கெழுநீர்மை யில்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள்அகத்த
  கழுநீர் மலர்இவள் யான்அதன் கண்மரு விப்பிரியாக்
  கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுலமே

                                                திருக்கோவை 123

 எனவும்,

     [சிற்றம்பலவன் திருவடிகளையே பொருந்தும் நீர்மையான் உள் மகிழ்ந்து
 முகம் மலர்வது போலச் சிறிதே மலரத் தொடங்கும் தேன்துளிக்கும்
 கழுநீர்மலர் இவள்; நான் அதன் கண் பொருந்தித் தேன் பருகும்
 வண்டாவேன்.]