"மயனார் விதித்தன்ன மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
பயனார் பயோதரப் பாவைஅன் னீர்பசும் பொன்குழைதோய்
நயனார விந்தத்து நஞ்சமும் வாய்இதழ் நல்அமுதும்
அயனார் படைத்தில ரேல்அடங் காதுஅவ் வரனுக்குமே"
[சிறந்த மதிலை உடைய தஞ்சைமன்னன் மலையில் உள்ள பாவை அன்னீர்! குழை அளவு நீண்ட கண்களில் நஞ்சினைப் படைத்த பிரமன் உங்கள் வாய்இதழில் அமுதத்தைப் படைக்காது விட்டால், உங்கள்
கண்நஞ்சும் சிவபெருமானும் தாங்குதல் இயலாது.]
தலைமகளைத் தலைமகன் விடுத்தல்:
"கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
எழுந்துஆர் மதிக்கம லம்எழில் தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகைஎனை ஆண்டவன் சிற்றம் பலம்அனையாய்
செழுந்தாது அவிழ்பொழில் ஆயத்துச் சேர்க திருத்தகவே.
[இப்பிறவியில் அழுந்தாது என்னை ஆண்டவனது சிற்றம்பலம் அனைய தலைவியே! விண் ஆகிய நீர்நிலையில் விண்மீன்களாகிய
மொட்டுக் களுக்கும் மேகங்களாகிய இலைகளுக்கும் நடுவில் சந்திரனாகிய தாமரை அழகுற அமைவது போலச் சோலையில் உள்ள உன்தோழியர் கூட்டத்தைச் சென்று அடைவாயாக.]
இன்னும் "அற்றமில் சிறப்பின்" என்றதனால், தலைவி சோர்தலும்
கொள்க:
|
|
|
|