வருத்தம் மிகும். அப்பொழுது அவள், தோழி செவிலி முதலியோர்
தன்னை வினவினாலும் வினவாவிட்டாலும் அறத்தொடு நிற்கும் நிலை
ஏற்படும். தன்னிடம் தலைவி அறத்தொடு நின்ற செய்தியைத் தோழி
பொதுவாகச் செவிலி கேட்ப உலகியல் கூறும் முகத்தானும், நேரிடையாகச்
செவிலி கேட்பப் பட்டாங்கு நிகழ்ந்தது கூறியானும், தம் குலத்திற்கும்
ஒழுக்கத்திற்கும் பெண் தன்மைக்கும் தாய் காவலுக்கும் தம் நாணத்திற்கும்
உலகியலுக்கும் மாறுபடாத வகையில் அறத்தொடுநிற்கும். செவிலி,
நற்றாய்க்கு நிகழ்ந்தபடியை வெளிப்படையாகக் கூறுவாள். நற்றாய் தந்தை
தன்னையருக்குக் குறிப்பினால் அறத்தொடுநிற்பாள். தலைவியை உற்று
நோக்கி, நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினைமறைப்பும்
செலவும் பயில்வும் ஆகிய அவ்வகை தம்மால் ஐயமுற்றுத் தோழி வினவு
வாள். செவிலி பாங்கியை வினவுவாள். தன்மகளை உற்றுநோக்கி வேறுபாடு
கண்டவழித் தோழியை நற்றாயும் வினவுவாள். தலைவி தலைவனோடு உடன்
போயவிடத்துப் பாங்கியும் செவிலியும் நற்றாயும் ஒருசேர அறத்தொடுநிற்பர்.
களவின்வழி வந்த கற்பும் களவின்வழி வாராக் கற்பும் எனக் கற்பு
இருவகைப்படும். கற்புக்காலப் புணர்ச்சியானது குரவரால் செய்விக்கப்படும்
மன்றல் புணர்ச்சி எனவும், வாயில்களால் ஊடல்தீர்த்துப் புணர்விக்கப்படும்
புணர்ச்சி எனவும் இருவகைப்படும். அவற்றுள், களவுப்புணர்ச்சியில்
தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போய் வேற்றூரில் தமர்
மனையில் வரைதலும் உண்டு; ஆதலின், இருமுதுகுரவர் கொடுப்பக்
கொள்ளாநிலையும் அதன்கண் நிகழும். இருவகைக்கற்புக்காலத்தும்,
தலைவனுக்குக் களவுப் புணர்ச்சியும் வதுவைப்புணர்ச்சியும் நிகழ்தலும்
உண்டு. அவ்விருவகைப் புணர்ச்சிக்கும் காதற்பரத்தையரும், காமக்
6