410 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் முதலாகக் கையுறை ஏற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறனுள் தோழி கூற்றாயின எல்லாம் வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தற்கும், தலைவிகூற்று ஆயின எல்லாம் மெலிதாகச் சொல்லிக் குறை நயத்தற்கும்,
இறைவிகையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் முதலாகத் தலைமகன் விருந்து இறை விரும்பல் ஈறாகச் சொல்லப்பட்ட பதின் மூன்றனுள் தோழிகூற்று ஆயின எல்லாம் கூட்டற்கும் தலைவன் கூற்று ஆயினஎல்லாம் கூடற்கும் கூட்டற்கும் வேட்டற்கும் உரிய எனக்கொள்க. 137
பகற்குறியின் வகை
510 கூட்டல் கூடல் பாங்கிற் கூட்டல் வேட்டல்என்று ஒருநால் வகைத்தே பகற்குறி.
நிறுத்த முறையானே பகற்குறி கூறுவனவற்றுள் இஃது அதன்வகை இத்துணைத்து என்கின்றது.
இ-ள் கூட்டல் முதலாக வேட்டல் ஈறாக நான்கு வகையினை உடைத்துப் பகற்குறி என்றவாறு. 138
விளக்கம்
இவை பாங்கியிற் கூட்டத்து வகையில் இறுதியில் கூறப்பட்டனவே.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - ந. அ. 151
"பழுதுஅறக் கூட்டல் கூடல் பாங்கின் விழுமிதின் கூட்டல் வேட்டல் என்றா வழுவில் பகற்குறி வகைநான்கு என்ப".
மா. அ. 43
138