அகத்திணையியல்-நூற்பா-139 411
பகற்குறியின் விரி
511 குறிஇடம் கூறல் முதலாப் பெறல்அரும் விருந்துஇறை விரும்பல் ஈறாப் பொருந்தப் பகர்ந்தபன் னிரண்டும் பகற்குறி விரியே.
இது பகற்குறி விரி இத்துணைப் பகுதித்து என்கின்றது.
இ-ள் குறிஇடம் கூறல் முதலாக விருந்து இறைவிரும்பல் ஈறாக மேல் பாங்கியிற்கூட்டத்துள் எடுத்து ஓதப்பட்ட பன்னிரண்டும் பகற்குறி விரியாம் என்றவாறு.
உதாரணம் மேல்காட்டிய எனக்கொள்க. 139
ஒத்த நூற்பாக்கள்
"முழுதும்- ந. அ, 152
"குறியிடம் கூறல் ஆடுஇடம் படர்தல் குறியிடைச் சேறல் இடத்துஉய்த்து நீங்கல் உவந்துரைத் தலலொடு மருங்குஅணை தல்லே அறிவுஅறி வித்தல் அவன்உள் மகிழ்தல் ஆயத்து உய்த்தல் தோழிவந்து கூடல் ஆடுஇடம் புகுதல் தனிகண்டு உரைத்தல் தடமென் முலையாள் பருவம் கூறி வரவு விலக்கல் வரைவுஉடன் படாது மிகுத்துரைத் தல்லொடு மெய்ம்மை உரைத்தல் வருத்தம் கூறல் தாய்அச்சம் கூறல் இல்செறிவு அறிவித்தல் தமர்நினைவு உரைத்தல் எதிர்கோள் கூறல் ஏறுகோள் கூறல் ஏதிலார் தம்உரை கூறல் அவளொடு கூறுவாள் போன்று தினைமுதிர்வு உரைத்தல் பகல்வரல் விலக்கல் பையுள் எய்தித் தினையொடு வெறுத்தல் சிறைப்புற மாக வேங்கையொடு வெறுத்தல் வெற்புஅமர் நாடற்குக்