412                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     கழுமலுற்று இரங்கல் கடிப்புனம் கையறக்
     கொய்தமை கூறல் பிரிவுஅருமை கூறல்
     மயிலொடு கூறல் வறும்புனம் காண்டல்
     பயில்பதி நோக்கிப் பதிமிக வாடல்
     சொன்னநா லெட்டும் தோன்றும் இயற்கை
     மன்னிய பகற்குறி வகையா கும்மே".

திருக்கோவை மு. வீ. கள 18 

    "முற்றிழை குறியிடம் கூறல்முத லாகக்
     கொற்றவன் விருந்துகைக் கோடல் ஈறாப்
     பகர்ந்தபன் னிரண்டும் பகற்குறி விரியே."

மா. அ. 44 

    "பாங்குணர் வையுற இரந்துகுறை யுறுதலும்
     ஆங்குஅவள் வினாதலும் மதியுடன் ஆக்கலும்
     துணிதலும் சேட்பட நிறுத்தலும் சுட்டியது
     அறியேன் அறிவன் மறையேல் என்றலும்
     குறியா கூறலும் படைத்தன மொழிதலும்
     அரியள் என்றலும் நீகூறு என்றலும்
     நகைகொண்டு ஆற்றலும் நகாதுஉரை என்றலும்
     கையுறை எளிமை காட்டலும் மெய்யுற
     ஒவ்வாது என்றலும் அவள்நிலை உணர்ந்து
     கொள்குவன் என்றலும் மடன்மாக் கூறலும்
     மற்றுஅது விலக்கலும் கையுறை கோடலும்
     விழைய உணர்தலும் நாணொடு நீங்கலும்
     வலிதாகச் சொல்லிக் குறைநயப் பித்தலும்
     தழீஇக் கோடலும் தழைஏற் பித்தலும்
     கையுறை எதிர்ந்தமை மெய்பெற இசைத்தலும்
     விரும்புஇடம் உரைத்தலும் குறியொடு நீங்கலும்
     புனைந்து நிலையலும் நிலைமை கூறலும்
     பாங்கிகொண்டு இகத்தலும் பகற்குறி ஆகும்".

த. நெ. வி. 17 

139