513 கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலைஅம்
பொழுதுகண்டு இரங்கலும்1 பாங்கி புலம்பலும்2
தலைவன் நீடத் தலைவி வருந்தலும்3
தலைவியைப் பாங்கி கழறலும்4 தலைவி
முன்னிலைப் புறமொழி மொழிதலும்5 இன்னுயிர்ப்
பாங்கியொடு பகர்தலும்6 பாங்கிஅச் சுறுத்தலும்7
நீங்கற்கு அருமை தலைவிநினைந்து இரங்கலும்8
தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றலும்9