9		தலைவிக்குத் தலைவன் வந்துகொண்டிருக்கும் செய்தியைப் பாங்கி
    குறிப்பிடுதல்.
 10		தலைவன் வெளிப்புறத்தே நிற்ப, தலைவியை வீட்டின்கண் செறித்த
    செய்தியைப் பாங்கி  கிளி முதலியவற்றிற்குக் கூறுவாள்போல அவனுக்கு
    அறிவித்தல்.
 11		தலைவன் முன்னே நிற்பவும் தோழி அவனை நோக்கிக் கூறாமல்,
    வண்டினை நோக்கிக்  கூறுவாள் போன்று, இற்செறிப்பை அவனுக்கு
    அறிவித்தல்
 12		பாங்கி தலைவன்முன்னே நின்று தலைவியைச் செவிலி வீட்டில்
    செறித்த செய்தியைக் 	குறிப்பிடுதல்.
 13		தலைவன்முன் நின்று தோழி தலைவியைப் பாதுகாக்க வேண்டும்
    என்று அவனை  வேண்டுதல்.
 14		தலைவன் தன்துயர் நீக்கப் பற்றுக்கோடின்றி மனத்துடனே
    கூறி்க்கொண்டு வருந்துதல்.