முன்னின்று உணர்த்தலும் ஓம்படை மொழிதலும் 
     தளர்ந்த நெஞ்சமொடு தஞ்சம் பெறாஅது 
     விளம்பல்ஈ ரேழ்ஒரு சார்பகற் குறிவிரி"	
   
     கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது கண்டு இரங்கல்:
  
 "பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற்று அற்றவர்க்குப் 
  புகலோன் புகுநர்க்குப் போக்குஅரி யோன்எவ ரும்புகலத் 
  தகலோன் பயில்தில்லைப் பைம்பொழில் சேக்கைகள் நோக்கினவால் 
  அகல்ஓங்கு இருகழி வாய்க்கொழு மீன்உண்ட அன்னங்களே".
  
     [கதிரவன் மறைந்து விட்டான். என்னைக் காக்கும் தலைவரும  தூரத்திலுள்ளார். பற்றற்ற  அடியாருக்குப் புகலிடமாய், தன்னை வந்து  அடைந்தார். நீங்குதல் இலராய் எல்லோராலும் விரும்பத் தகுபவராயுள்ள  சிவபெருமானுடைய தில்லைப்பொழிலில் உள்ள தத்தம் கூடுகளை நோக்கி,  உப்பங்கழிகளில் இரைதேடிய அன்னங்கள் புகத் தொடங்கிவிட்டன]
  
     பாங்கி புலம்பல்: 
 "பொன்னார் நறுமலர்ப் புன்னையங் கானல் புளினம்தங்கி 
  பன்னாள் மணந்து மறந்தவர் போல அருக்கன்சென்ற 
  பின்னா அதன்முன்ன மேசெக்கர் மாலை பிறந்ததுஇனி 
  என்னாகும் என்றறி யேன்வளங் கோதை இளங்கொடிக்கே".	
  
 எனவும்,
 
     [புன்னையங்கானலில் மணற்குன்றில் ஒளிவீசிப் பல நாளும் நம்மைக்கூடி  இப்பொழுது மறந்தவர் புலப்படாமல் இருப்பது போலக் கதிரவன் புலப்படாது  போனதை ஒட்டிச் செந்நிறமாலை  தோன்றிவிட்டது. இப்பொழுது தலைவிக்கு  என்ன நிலை ஏற்படுமோ என்று அறியேன்.]
  |  
 
  |  
  
				
							 | 
						 
					 
				 |