அகத்திணையியல்-நூற்பா-141                              417


 

     தலைவன் நீடத்தலைவி வருந்தல்:

 "மூவல் தழீஇய அருள்முத லோன்தில்லைச் செல்வன்முந்நீர்
  நாவல் தழீஇயஇந் நானிலம் துஞ்சும் நயந்தஇன்பச்
  சேவல் தழீஇச்சென்று தான் துஞ்சும்யான் துயிலாச்செயிர்எம்
  காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களிஅன்னமே".

திருக்கோவை 191

 எனவும்,

     [மூவல் என்ற ஊரில் கோயில்கொண்டுள்ள தில்லைப் பெருமானுடைய
 கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தவர் உறங்கத் தொடங்கிவிட்டனர்.
 சேவலைத் தழுவி உறங்காநின்ற பெண் அன்னம்  யான் துயிலாத துயரத்தை
 என்னைக் காக்கும் பொறுப்புடைய தலைவருக்கு உரைப்பதாக இல்லையே.]

     தலைவியைப் பாங்கி கழறல்:

 "சிறந்தார் தெரிந்தசெழுந்தமிழ் வாணன்தென் மாறைவெற்பர்
  துறந்தார் எனைஎன்று சொல்லுவது ஏன்இந்தத் தொல்உலகில்
  பிறந்தார் எவர்க்கும் பிரிவுஉள தால்வெய்ய பேர்அமர்க்கண்
  புறம்தாழ் கரிய குழல்செய்ய வாய்ஐய பூங்கொடியே."

தஞ்சை. 145

 எனவும்,

     [பூங்கொடியே! தமிழ்வாணன் தென்மாறை வெற்பர் உன்னைத்
 துறந்துவிட்டார் என்று நீ  சொல்லுவது ஏன்? இவ்வுலகில் பிறந்தவர்
 எல்லோருக்கும் பிரிவு உண்டு என்பதை நீ  அறியாயோ.]

     தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல்:

    "யாவதும் அறிகிலர் கழறு வோரே
     தாய்இல் முட்டை போல உள்கிடந்து

      53