பாங்கி தலைவன்முன் நின்று இல்செறிப்பு உணர்த்தல்:
"மால்வரை வெற்ப வணங்குகுரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம்யாம்-தூஅருவி
பூக்கண் கழூஉம் புறவிற்றால் பொன்விளையும்
பாக்கம் உதுஎம் இடம்".
[மூங்கில் வளரும் மலைநாடனே! வளைந்த கதிர்களை உடைய தினைக்காவலை நாங்கள் இன்றோடு நீத்துவிட்டோம். அருவிநீர் பூக்களைக் கழுவும் காட்டில் பொன்விளையும் அந்தப் பாக்கமே யாங்கள் உறையும் இடமாகும்]
பாங்கி தலைவன் முன்நின்று இல்செறிப்பு உணர்த்தி ஓம்படை சாற்றல்:
"காவைப் பொருவுசெங் கைக்கரு மாணிக்கன் கப்பல்வள்ளிக்
கோவைப் பொருசெய்ய வேல்கொற்ற வாநின் குறைநயந்து
மாவைக் குளிர்நிழல் ஆக்கிய என்னை மறப்பினும்என்
பூவைக்கு நல்உயிர் நீஉடம் பேகொண்டு போகின்றதே".
[கற்பகச் சோலையை ஒத்த கொடைக்கையுடைய கருமாணிக்கனுடைய கப்பல் என்ற ஊரைச்சார்ந்த மலையில் முருகனை ஒத்த செவ்வேல் கொற்றவா! உன் குறையை விரும்பி ஏற்று மாமர நிழலிலே உனக்குத் தலைவியைக் கூட்டுவித்த என்னை மறந்தாலும், என் தலைவிக்கு நீயே உயிர், யான் அவள் உடலையே அழைத்துச் செல்கின்றேன் என்பதை உணர்வாயாக.]
தலைவன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல்:
ஏஅலர் ஏய்விழி மாந்தளிர் மேனியர் ஏவல்இனிக்
காவல ரேமனம் காத்தனம் நாம்களி யானைசெம்பொன் |
|
|
|