அகத்திணையியல்-நூற்பா-142,143 423
பகற்குறி இடையீட்டு வகை
514 விலக்கல் சேறல் கலக்கம் என்றாங்கு இகப்பில்மூ வகைத்தே பகற்குறி இடையீடு."
இது நிறுத்தமுறையானே பகற்குறி இடையீட்டுவகை இத்துணைத்து என்கின்றது.
இ-ள் விலக்கலும் சேறலும் கலக்கமும் எனமூன்று வகையினை உடைத்தாம், பகற்குறி இடையீடு என்றவாறு.
142
விளக்கம்
விலக்கல் - தோழி தலைவனையும் தலைவியையும் குறிக்கண் வாராதவாறு விலக்குதல்.
சேறல் - தலைவன் குறியிடத்தை அடைதல்.
கலக்கம் - தலைவன் தலைவியைச் சந்தித்த இடத்தை நோக்கி மனம் கலங்குதல்.
பகற்குறி இடையீடு-பகற்குறிக்கு இடையில் சில தடைகள் நிகழ்தல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - ந. அ. 155
"தேர்ந்து விலக்கல் சேறல் கலக்கம்என்று ஏய்ந்தமூ வகைத்தே பகற்குறி இடையீடு."
மா. அ. 47
பகற்குறி இடையீட்டு விரி
515 இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும்1 இறைவியைக் குறிவரல் விலக்கலும்2 இறைமகள் ஆடுஇடம் நோக்கி அழிதலும்3 பாங்கி ஆடுஇடம் விடுத்துக்கொண்டு அகறலும்4 பின்னாள்