"மன்னனைக் குறிவரல் விலக்கலும் மின்இடைக்
கோதையைப் பாங்கி குறிவரல் விலக்கலும்
ஆடுஇடம் நோக்கி ஆயிழை அயர்தலும்
ஆடுஇடம் விடுத்துக்கொண்டு அகறலும் பின்னாள்
நீடுநினைந்து இரங்கலும் நிறைபொறை வழுவா
அண்ணல் வறுங்களம் நண்ணி மறுகலும்
ஒண்ணுதல் வாழும் ஊரினை நோக்கி
மதிமயங் கலும்என வகுத்தஓ ரேழும்
விதிமுறை பகற்குறி இடையீட்டு விரியே."