[அன்னமே! துவராபதியில் நாவலர்புகழவாழும்தொண்டைமான் மலையிலே அன்னை இப்போது உன்தோள்மெலிவும் நுதல்வண்ணமும பார்த்து அனல்மூச்சுவிட்டாள். இனி நமக்கு இப்பொழில் விளையாட்டிடம் ஆகாது, அன்னை கருதியதை நாம் அறியோம்.]
இறைமகள் ஆடுஇடம் நோக்கி அழிதல்:
"பரிவுசெய்து ஆண்டுஅம் பலத்துப் பயில்வோன பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத்து ஐவனம் கொய்யவும் இவ்வனத்தே
பிரிவுசெய் தால்அரி தேகொள்கை பேயொடும் என்னும்பெற்றி
இருவிசெய் தாளின்இருந்துஇன்று காட்டும் இளங்கிளியே"
[அன்போடு நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானுடைய பரங்குன்றில அருவிநீர் பாயும் புனத்தில் மலைநெல்லைக் கொய்த பின்னரும், "பேயோடு பழகினாலும் பிரிதல் அரிது" என்பதைக் காட்டுவனபோல, நெல் கொய்த அரிதாளில் இன்றும் கிளிகள் தங்கியுள்ளன.]
பாங்கி ஆடுஇடம் விடுத்துக்கொண்டு அகறல்:
"கணியார் கருத்துஇன்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே
மணிஆர் பொழில்காள் மறத்திர்கண்டீர் மன்னும் அம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால்
துணியா தனதுணிந் தார்என்னும் நீர்மைகள் சொல்லுமினே."
[புனமே! பொழில்களே! அம்பலத்தான் கயிலை மயில்களே! வேங்கையின் எண்ணம் ஈடேறிவிட்டது. யாம் வீட்டிற்குப் போகிறோம். தலைவர் வந்தால் துணியக் கூடாத பிரிதலைத்துணிந்து சென்றுவிட்டனர்" என்று எம்பெற்றிகளை அவருக்குக் கூறுங்கள்.]
பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கல்:
"பொதுவிளில் தீர்த்துஎன்னை ஆண்டோன் புலியூர் அரன்பொருப்பே
இதுஎனில் என்என்று இருக்கின்ற வாறுஎம் இரும்பொழிலே |
|
|
|