எதுஉமக்கு எய்தியது என்உற்ற னிர்அறை ஈண்டுஅருவி
மதுவினில் கைப்புவைத் தால்ஒத்த வாமற்றுஇவ் வான்புனமே.
[இறைவனை அடைய அதுவோ இதுவோ வழி" என்று மயங்கிப பொதுவாக நின்ற நிலையை நீக்கி என்னை ஆட்கொண்ட தில்லை அரன் பொருப்பாய் யான் முன்பு பயின்ற இடம் இன்று எவ்வாறு காட்சியளிக்கின்றது? சோலைகளே! உமக்கு எய்திய குறைதான் யாது? நீர் என்ன துன்பம் உற்றிருக்கிறீர்? அருவிநீர் பாயும் இப்புனம் தேனில் கசப்பை வைத்தாற் போன்று இருக்கின்ற காரணம் யாது?]
தலைவன் வறுங்களம் நாடி மறுகல்:
"தொடைவந்த தண்ணந்துழாய்த்தொண்டை வேந்தன் துவரைவெற்பின்
இடைவந்த காணவர் ஏகுஎன்ற போதில் இருங்கயல்கண்
கடைவந்து உகுபுனல் கச்சுஇள நீர்புக கால்கள்அங்ஙன்
நடைவந்த தோமயில் காள்என்னை வாழ்வித்த நன்னுதற்கே."
[திருத்துழாய்மாலையை அணிந்த தொண்டைமானுடைய துவரையை அடுத்தமலையிலே, கானவர், தலைவியை வீட்டிற்குச் செல் என்றபோதில், அவள் விடுத்த கண்ணீர் நகில்கள்மேல் பாய, மயில்களே! என்னை வாழ்வித்த தலைவிக்கு வீடு செல்வதற்குக் கால்கள் எவ்வாறு நடந்து சென்றனவோ?]
தலைமகன் தலைமகள் வாழும்ஊர் நோக்கி மதிமயங்கல்:
"ஆனந்த மாக்கடல் ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின்
தேன்உந்து மாமலைச் சீறூர் இது செய்ய லாவதுஇல்லை
வான்உந்து மாமதி வேண்டி அழும்மழப் போலும்மன்னோ
நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே."
|
|
|
|