428                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [மனமே! ஆனந்தக்கடலாய் நடமாடும் சிவபெருமானுடைய
 சிற்றம்பலத்தை ஒத்த தலைவி   வாழும் தேன்கூடுகள் செறிந்த
 மலையகத்துச் சீறூர் இது எனினும், யான் செய்யத்தக்க செயல் ஒன்றுமில்லை.
 வானத்திலுள்ள சந்திரனைத் தான் பெறல் வேண்டும் என்று விரும்பி அழும்
 குழந்தையைப் போல, நானும் தளர்ந்தேன்; நீயும் தளர்ந்தாய்.]

     இவற்றுள் முன்னைய இரண்டும் விலக்கற்கும், பாங்கி ஆடுஇடம்
 விடுத்துக்கொண்டு அகறல்   ஆகிய ஒன்றும் சேறற்கும், ஏனைய நான்கும்
 கலக்கத்துக்கும் உரியவாம் என்றவாறு. உரையிற்   கோடலான், பாங்கிஆடு
 இடம் விடுத்துக்கொண்டு அகன்ற பின்னர், அவன் உருவு வெளிப்பட
 இரங்கலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:

     அழியும் இரும்புன மும்அழி யாமணல் ஆழிதொட்ட
     சுழியும் மறிந்த இதணமும் பார்த்துத் துணைவிழிநீர்
     பொழிய இருந்து புலம்பும்என் ஆவியும் பாவிஎம்மூர்
     வழியும் அறிந்துஇங் ஙனேவந்த வாஎம் உழைவள்ளலே.

அம்பி. 186 

 என வரும்.

     ["புனம் அழிய, சுழி மறிய, விழிநீர் பொழியப் புலம்பும் என்
 ஆவிநிலை பார்த்துத்   தலைவன் எம் ஊர்வழி வினவிவந்துள்ளானோ?"
 என்று தலைவி தலைவன்உருவெளி கண்டு  சொற்றது.]

143 

இரவுக்குறியின் வகை   

 516 வேண்டல்1 மறுத்தல்2 உடன்படல்3 கூட்டல்4
     கூடல்5 பாராட்டல்6 பாங்கில் கூட்டல்7
     உயங்கல்8 நீங்கல்9 என்று ஒன்பது வகைத்தே
     இயம்பிப் போந்த இரவுக் குறியே.

     இது நிறுத்தமுறையானே இரவுக்குறிவகை இத்துணைத்து என்கின்றது.