அகத்திணையியல்-நூற்பா எண்-144,45                       429


 

     இ-ள் வேண்டல் முதலாக நீங்கல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பது
 வகையினை உடைத்து,   மேல்சொல்லிப்போந்த இரவுக்குறி என்றவாறு.  144

விளக்கம்   

 1 தலைவன் இரவுக்குறி விரும்புதல்.
 2 முதலில் பாங்கி இரவுக்குறியை மறுத்தல்.
 3 தலைவனது சோர்வுகண்டு பாங்கி உடன்படுதல்.
 4 தலைவியை இரவுக்குறியில் தலைவனிடம் பாங்கி கூட்டல்.
 5 தலைவன் தலைவியைக் கூடல்.
 6 தலைவன் தலைவியைப் புகழ்ந்து உரைத்தல்.
 7 தலைவியைத் தலைவன் பாங்கியோடு அனுப்புதல்.
 8 தோழி இரவுக்குறியை விலக்கத் தலைவன் வாடுதல்.
 9 தலைவியை இரவுக்குறிக்கண் கூடிய தலைவன் நீங்குதல்.

ஒத்த நூற்பாக்கள்   

     முழுதும்-                                          ந. அ. 157

     "மாட்சியின் வேண்டல் மறுத்தல் உடன்படல்
     சூழ்ச்சியின் கூட்டம் சோலையில் கூடல்
     பாராட் டுதலொடு பாங்கிற் கூட்டல்
     உயத்தல் நீங்கலென்று ஒன்பான் ஆகும்
     வகுத்துப் போந்த இரவிற்குறி வகையே."

மா. அ. 49 

144 

இரவுக்குறியின் விரி   

 517 இறையோன் இருட்குறி வேண்டலும்1 பாங்கி
     நெறியினது அருமை கூறலும்2 இறையோன்
     நெறியினது எளிமை கூறலும்3 பாங்கி
     அவன்நாட்டு அணிஇயல் வினாதலும்4 கிழவோன்
     அவள்நாட்டு அணிஇயல் வினாதலும்5 அவற்குத்
     தன்நாட்டு அணிஇயல் பாங்கி சாற்றலும்6
     இறைவிக்கு இறையோன் குறிப்புஅறி வுறுத்தலும்7