19 தலைவன் தலைவியைப் புனைந்து உரைத்தல்.
20 ஆற்றின்ஏதம் கூறித் தலைவி தலைவன் குறிக்கண் வருதலை விலக்குதல்.
21 தலைவன் தலைவியை வீட்டுக் கட்டிடஎல்லைக்குக் கொண்டு வந்து
விடுத்தல்.
22 தோழி தலைவியை அடைந்து தான் பறித்துவந்த மலர் முதலியவற்றைக்
காட்டுதல்.
23 தோழி தலைவியை வீட்டிற்குள் அழைத்துச் செல்லுதல்.
24 பாங்கி, பின் தலைவனை அடைந்து இரவில் தலைவியைக்
காணவருவதைத் தவிருமாறு வேண்டுதல்.
25 பாங்கி வரவுவிலக்கியதை ஆற்றாத தலைவன் வருந்திக் கூறுதல்.
26 "தலைவன் வரும்வழி அவனுக்குத் துன்பம் தருமே" என்று தலைவி
கொண்ட துன்பத்தைத் தோழி தலைவனுக்குக்கூறி விடுத்தல்.
27 தலைவியைக் கூடிய தலைவன் தன் இருப்பிடம்அடைதல்.
[இரவுக்குறி
தலைவி வீட்டுச் சூழலைக்கடவாது கட்டிடத்திற்கு அப்பால்
மனைக்கொல்லையில் நிகழ்வதாகும்]