தாய்துயில் அறிதல் தலைவிதுயில் எடுத்தல்
இடத்துஉய்த்து நீங்கல் தளர்வுஅகன்று உரைத்தல்
மருங்குஅணை தல்லொடு முகம்கண்டு மகிழ்தல்
பள்ளியிடத்து உய்த்தல் பள்ளியிடத்து உய்த்து
வரைவு கடாவி வரவு விலக்கல்
வரைவுஉடன் படாஅது ஆற்றாது உரைத்தல்
அதரிடைச் செலவிற்கு இரக்கம் கூறல்
இருள்அற நிலவு வெளிப்பட வருந்தல்
வேற்றுக்குறி கூறல் கடல்இடை வைத்துத்
துயர்அறி வித்தல் தோழியும் இன்றி
தானே கிடந்து தனிமையுற்று ஆற்றும்
காமம் மிக்க கழிபடர் கிளவி
காப்புச்சிறை மிக்க கையறு கிளவி
ஆறுபார்த்து உற்ற அச்சக் கிளவி
தன்னுள் கையாறு எய்திடு கிளவி
நிலைகண்டு உரைத்தல் நெடுங்கடல் சேர்த்தல்
அலர்அறி வித்தலோடு ஆறைம் மூன்றும்
இரவுக் குறியிவை என்றிசி னோரே." திருக்கோவை
மு. வீ. கள. 19
"வேந்தன் இருட்குறி வேண்டலும் சேடி
ஆய்ந்த வழியினது அருமை கூறலும்
வேந்தன் வழியினது எளிமை விளம்பலும்
வேந்தன்நாட்டு அணியியல் பாங்கி வினாதலும்
அவள்நாட்டு அணியியல் அண்ணல் வினாதலும்
பாங்கி தன்நாட்டு அணியியல் பகர்தலும்
கோற்றொடிக்கு இறைவன் குறிஅறி வுறுத்தலும்
மாற்றம்நே ராதுஅவள் மனத்தொடு கிளத்தலும்
திருந்திழை பாங்கியொடு திருந்தி உரைத்தலும்
பொருந்தியது இகுளை புரவலற்கு உணர்த்தலும்
தான்குறி யிடைநிறீஇத் தாய்துயில் அறிதலும்
55