மான்தனக்கு இறைவன் வரவுஅறி வித்தலும்
கொண்டுஇடம் சேறலும் குறிஉய்த்து அகறலும்
மண்டமர்க் கடந்தோன் வந்துஎதிர்ப் படுதலும்
இறைமகள் ஆற்றினது அருமைநினைந்து இரங்கலும்
இறைவன் தேற்றலும் எய்தலும் புகழ்தலும்
குலமகள் இறைவனைக் குறிவிலக் கலும்அவன்
மெல்லியல் மடந்தையை இல்வயின் விடுத்தலும்
காரிகைக்கு இகுளை கையுறை காட்டலும்
இறைவியை இகுளை இல்கொண்டு ஏகலும்
இறைவனை இகுளை வரவு விலக்கலும்
இறைமகன் மயங்கலும் இன்னவள் துயர்நிலை
செப்பி விடுத்தலும் திருநுதல் புணர்ந்தவன்
நீங்கலும் என்ன நிகழ்த்துமூ வொன்பதும்
ஈங்குஇனிது உணர்த்தும் இரவுக்குறி விரியே."