அகத்திணையியல்-நூற்பா எண்-145                         435


 

     [வெள்வளையாய்! நம் பிறவிப்பிணிக்கு மருந்தாய் அம்பலத்தில்
 அமிர்தாமவன்   சிவபெருமான். அவன் குன்றிலிருந்து விழும் அருவிகள்
 அழகு திகழுமாறு மேகம் பொதிந்து   இருள்செறிந்த குறுங்காட்டில்உள்ள
 உங்கள் சீறூருக்கு யான் விருந்தினனாக வந்துள்ளேன்.]

     பாங்கி நெறியினது அருமைகூறுல்:

  விசும்பினுக்கு ஏணி நெறிஅன்னசின்னெறி மேல்மழைதூங்கு
  அசும்பினில் துன்னி அளைநுழைந் தால்ஒக்கும் ஐயமெய்யே
  இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிதுஎழில் அம்பலத்துப்
  பசும்பனிக் கோடு மிலைந்தான் மலையத்துஎம் வாழ்பதியே.

திரு. 149 

     [இசும்பு-ஏற்றுஇழிவு]

 எனவும்,

     [பிறைசூடி அம்பலத்தாடும் பெருமானுடைய மலைய
 மலையைச்சார்ந்த எம்வாழ்பதி,  விசும்பில் கிடந்தது ஓர் ஏணி நெறிபோலும்
 சிறுநெறிமேல் மழை இடையறாது நிற்றலான்   இடைஇடை உண்டாகும் சிறு
 திவலைகளோடு பொருந்தி ஏறுமிடத்துக் குறுகியிருப்பதனால்
 குகையில் நுழைந்து செல்வதை ஒத்திருப்பதோடு, வழுக்குதலினாலும்
 ஏற்றிழிவுகளாலும்  மனத்தாலும் ஏறுதற்கு அரிதாயிருக்கும்.]

      தலைவன் நெறியினது எளிமை கூறல்:

  அரவுக்கு மெல்லியல் சாயல்உள் ளேஉண்டு அறஇருண்ட
  இரவுக்கு இனிய திருமுகம் தோன்றும் எடுத்த வெண்ணெய்க்
  கரவுக் கடியுண்ட மால்கரு மாணிக்கன் கப்பல்அன்னாய்
  உருமுக்கு நீதந்த காமவெந் தீஉண்டுஎன் உள்ளத்திலே.

கப்பல்-145 

 எனவும்,

     [வெண்ணெயைத் திருடியுண்ட திருமாலின் அவதாரமான
 கருமாணிக்கனுடைய கப்பல் என்ற   ஊரை ஒத்த இயற்கைஅழகு உடையாய்!
 வழியிடைப் பாம்புகளை ஓட்ட