436                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 மயில் போன்ற சாயலை உடைய தலைவி என் உள்ளே உள்ளாள்;
 மிக இருண்ட  இருட்டைப் போக்கத் தலைவியின் ஒளிமுகம் எனக்கு
 உருவெளியாகக் காட்சி வழங்கும்;   இடியைத் தடுக்க அவள் தந்த காமத்தீ
 என் உள்ளத்தில் உண்டு; ஆதலின் இவ்விரவிடை இந்நெறிக்கண் வருதல்
 எனக்கு எளிதே.]

      பாங்கி அவன் நாட்டு அணியியல் வினாதல்:

  வரைஅன்று ஒருகால் இருகால் வளைய நிமிர்த்துவட்கார்
  நிறைஅன்று அனல்எழஎய்துநின்றோன் தில்லை அன்னநின்ஊர்
  விரைஎன்ன மென்நிழல் என்ன வெறுயுறு தாதுஇவர்போது
  உரைஎன்ன வோசிலம் பாநலம் பாவி ஒளிர்வனவே.

திரு. 152 

 எனவும்,

     [சிலம்பா! மேருவை வளைத்துத் திரிபுரத்தை அழித்த
 சிவபெருமானின் தில்லையைஒத்த   உன்ஊரினர் பூசும் நறுமணப்பொருள்
 யாது?  அவர்கள் தங்கி விளையாடும் நிழல் யாது? அவர்கள்   அணிந்து
 வனப்புக்கொள்ளும் நறுமண   மலர்கள்தாம் யாவை?]

  

     தலைமகன் அவள் நாட்டு அணியியல் வினாதல்:

  செம்மலர் ஆயிரம் தூஉய்க்கரு மால்திருக் கண்அணியும்
  மொய்ம்மலர்ஈங்கழல் அம்பலத்தோன்மன்னும்தென்மலையத்து
  எம்மலர்சூடி நின்றுஎச்சாந்துஅணிந்துஎன்னநன்னிழல்வாய்
  அம்மலர் வாள்கண்நல் லாய்எல்லி வாய்நுமர் ஆடுவதே.

திரு. 153 

 எனவும்,

     ["மலரும் வாளும் போன்ற கண்ணாய்! ஆயிரம் தாமரைகளைத்
 தூவி அருச்சித்து இறுதியில்   தன்கண்ணையும் இடந்து திருமால்
 அருச்சிக்கும் திருவடிகளை உடைய