அகத்திணையியல்-நூற்பா எண்-145                         437


 

 அம்பலத்தோன் பொருந்திய தென் மலையத்திலே, இரவில் நுமர் எம்மலர்
 சூடி எச்சாந்து   அணிந்து எந்த மரத்தின் நிழலிலே ஆடுவர்? கூறுவாயாக
 என்று, தோழி வினாவிய வினாவின்   உட்கருத்தை உணர்ந்த தலைவன்
 அவளை நோக்கி அவள் நாடு பற்றி வினவியவாறு]

     அவற்குத் தன்நாட்டு அணியியல் பாங்கி சாற்றல்:

  பனைவளர் கைம்மாப்படாத்து அம்பலத்தரன் பாதம்விண்ணோர்
  புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சாந்துஅணிந்து
  சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும்
  சினைவளர்வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும்செழும்பொழிலே.

திரு. 154 

 எனவும்,

     [யானைத்தோலைப் போர்த்த சிவபெருமான் திருவடிகளைத்
 தேவர்கள் போற்றும் பக்கத்தைஉடைய பொதியமலைச் சந்தனத்தை
 அணிந்து, குவளைப்பூக்களைச்சூடி, மயில்கள்   துயிலும் கிளைகளையுடைய
 வேங்கைமரச் சோலையே யாங்கள் ஆடும் இடமாகும்.]

     பாங்கி இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்தல்:

  மோட்டுஅம் கதிர்முலை பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
  கோட்டம் தருநம் குருமுடி வெற்பன் மழைகுழுமி
  நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச்சிங்கம்
  வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லும் மெல்லியலே.

திரு. 156 

 எனவும்,

     [தலைவியே! பார்வதிபங்கனாகிய சிவபெருமான் திருவடியே
 பணிந்து வணங்கும்   தலையினைஉடைய நம்தலைவன், மேகங்கள்
 கூடுதலால் கண்ஒளி பயன்படாத செறிந்த இருளில், யானைகள் நடுங்கச
 சிங்கம் வேட்டைக்குத்திரியும் மலைப்பகுதியின் வழயே இரவுக்குறிக்கு
 வருவதாகக் கூறுகிறான்.]