நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல்:
செழுங்கார் முழவுஅதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்
முழங்குஆர் அரிமுரண் வாரணம்வேட்டைசெய்மொய்இருள்வாய்
வழங்கா அதரின் வழங்குஎன்று மோஇன்றுஎம் வள்ளலையே.
[மேகம்போல முழவு ஒலிக்கும் சிற்றம்பலத்தில் திருமால் மலர்இட்டு் அருச்சிக்கும்படி கூத்தாடும் சிவபெருமான் கழல்களை வழிபடாதவர்போலச் சிங்கம் யானைகளை வேட்டையாடும் இருள்செறிந்த மக்கள் போக்குவரத்து அற்ற வழியிலே நம்வள்ளலை ?வருக? என்றுகூற நம்மனம் இசையுமா?]
நேரிழை, பாங்கியொடு நேர்ந்து உரைத்தல்:
ஓங்கும் ஒருவிடம் உண்டுஅம் பலத்துஉம்பர் உய்யஅன்று
தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி
வீங்கும்சுனைப்புனல்வீழ்ந்து அன்று அழுங்கப்பிடித்து எடுத்து
வாங்கு மவர்க்குஅறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே.
[ஆலகாலவிடத்தை உண்டு அம்பலத்துத் தேவர் உய்யத் தாங்கும் சிவபெருமானுடைய மலையிலே அருவியால் நிறைந்த புனலை உடைய சுனையில் விழுந்து நாம் தடுமாறிய போது நம்மை எடுத்துக்காத்த தலைவனுக்கு யான் என்ன விடை கூறுவது? என்று அறியாது தடுமாறுகிறேன்.]
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தல்:
ஏனல் பசுங்கதிர் என்றூழ்க்கு அழிய எழிலிஉன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம்பு ஆர்சிலம்பா
யானிற்றையாமத்து நின் அருள்மேல் நிற்கல் உற்றுச்சென்றேன்
தேன்நக்க கொன்றையன் தில்லை உறார்செல்லும் செல்லல்களே.
|
|
|
|