அகத்திணையியல்-நூற்பா எண்-145                         439


 

     [வெப்பம் தாங்காது தினைப்பயிர் கருகிற்றாகக் குறவர்கள மழையை
 வேண்டித் தெய்வத்தை   வழிபட்டு ஒலிசெய்யும் மலைநாடனே! யான் இன்று
 இரவில் நினக்கு இருட்குறி வேண்டித்   தலைவியிடம் சென்று
 சிவபெருமானுடைய தில்லையை அடையாதவர் அடையும் துன்பங்களை ஒத்த
 இன்னலுடன் அவள் இசைவைப் பெற்றுள்ளேன்.]

     பாங்கி தலைமகனைக் குறியிடத்து நிறுத்திவந்து தாய்துயில் அறிதல்:

  கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
  சேடுஆர் மதில்மல்லல் தில்லைஅன் னாய்சிறு கண்பெருவெண்
  கோடுஆர் கரிகுரு மாமணி ஊசலைக் கோப்புஅழித்துத்
  தோடுஆர் மதுமலர் நாகத்தை நூக்கும்நம் சூழ்பொழிற்கே.

திரு. 161 

 எனவும்,

     [திரிபுரத்தை எறித்த அரனுடைய மேதக்க மதில்களை உடைய
 வளமான தில்லை அன்னாய்!   யானை ஒன்று நம் ஊசலை அழித்து நம்
 சோலையில் பூக்கள்மிக்க நாகமரத்தை ஒடிக்கின்றது]

     பாங்கி தலைவிக்குத் தலைவன் வரவு அறிவுறுத்தல்:

  முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றிற்கும் முற்றும்இற்றால
  பின்னும் ஒருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்
  துன்னும்ஓர் இன்பம்மென்தோகைதம் தோகைக்குச்சொல்லுவபோல்
  மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயில்இனமே.

திரு. 160 

 எனவும்,

     [உலகத் தோற்றத்தின் முன்னும் உலகங்களின் அழிவின் பின்னும்
 தாம் ஒருவராய் இருக்கும்   சிவபெருமானுடைய பேரருள்போலத் தமக்கு
 ஏற்பட்ட இன்பத்தை ஆண்மயில்கள்   தம்பெடைகளுக்குச் சொல்லுவன
 போலத் துயில்இன்றி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.]