[மன்மதனை அழித்த சிவபெருமான் தில்லையிலே சூரியன் அடைத்த
உம் இல்லாகிய தாமரையின் கதவுகளைச் சூரியனே திறப்பதன் முன்
நீங்களே திறந்துகொண்டு வந்துவிட்டீர்களா? மேகலையை ஒலியாமல்
பிடித்துக்கொண்டு சிலம்புகளை அசையாதபடி மேலே கடுக்கி அஞ்சத்தக்க
அரையாமத்தில் ஈண்டுவந்து தங்கி விரும்பியது யாதோ? கூறுவீராக.]
[நாம் முன்னிலையைத் தன்மையாகக் கூறியது.]