அழுந்தேன் நரகத்து யான்என்று இருப்பவந்து ஆண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுஅகத்த
கொழுந்தேன் மலர்வாய்க்குமுதம் இவள்யான்குழுஉச்சுடர்கொண்டு
எழுந்துஆங்கு அதுமலர்த் தும்உயர் வானத்து இளமதியே.
[யான் நரகத்துன்பத்தில் அழுந்தாதபடி என்னைவந்து ஆட்கொண்ட செழுந்தேனாகிய சிவபெருமானது தில்லையை அடுத்த காட்டில் தேன் வெளிப்படும் குமுத மலர் இவள். நான் நிறமான கிரணங்களைக்கொண்டு அதனை மலர்த்தும் வான்அகத்து இளமதியம் ஆவேன்.]
தலைவி தலைவனைக் குறிவிலக்கல்:
மூரல் கதிர்முத்த வார்முலை ஆவியின் மூழ்கநனி
வாரற்க நீதஞ்சை வாணன்வெற் பாவய மாவழங்கும்
வேரல் கடிய கவலையி னூடு வெயிலவற்கும்
சாரற்கு அருமைய தாய்இருள் கூரும்நம் சாரலிலே.
[தஞ்சை வாணன் வெற்பா! முத்துமாலை அணிந்த நகில்களாகிய குளத்தில் முழுக, புலி முதலியன வழங்கும் மூங்கில் வளர்ந்துள்ள பிளவுபட்ட வழிகளின் ஊடே, கதிரவனும் நுழைகல்லா இருள்மிக்க நம் மலைச்சரிவில் நீ வாரற்க]
தலைவன் தலைவியை இல்வயின் விடுத்தல்:
சுரும்புஉறு நீலம்கொய் யல்தமி நின்று துயில்பயின்மோ
அரும்பெறல் தோழியோடு ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார்
|
|
|
|