இரும்புஉறுமாமதிள் பொன்இஞ்சிவெள்ளிப் புரிசை அன்றுஓர்
துரும்புறச் செற்றகொற்றத்து எம்பிரான் தில்லைசூழ் பொழிற்கே.
[திரிபுர அசுரர்களின் பொன் வெள்ளி இரும்பு மதில்களை அழித்த வெற்றியை உடைய சிவபெருமானது தில்லையைச் சூழ்ந்த பொழிற்கண் தனியே நின்று நீலப்பூக்களைக் கொய்து கொண்டுஇராதே. உன் பெறற்கரிய தோழியோடு சென்று தோழியர் கூட்டத்திடையே உறக்கம் கொள்வாயாக.]
பாங்கி இறைவியை எய்திக் கையுறை காட்டல்:
செஞ்சேல் பொருகுழை சேர்க்கும் குவளையும் தேன்இரங்கும்
மஞ்சுஏர் குழற்குஅணி மவ்வலும் கொய்தனன் வந்தனன்முன்
அஞ்சேல் அரிவைஅஞ் சேல்அடி யேன்விட்டு அகன்றதற்கு
நெஞ்சே பட்டது நீஏது பின்னை நினைத்தனையே.
அம்பி. 211
[அரிவை! காதுகளில் செருகும் குவளைப்பூக்களையும் வண்டுகள் ஒலிக்கும் கார்மேகம்போன்ற கூந்தலுக்கு அணியத் தக்க முல்லைப் பூக்களையும் யான் கொய்து வந்துள்ளேன். உன்னைத் தனியே விட்டுப் போனதற்கு என் நெஞ்சு மிகவும் துன்பப்பட்டது. நீ யாது நினைத்தாயோ? அஞ்சாதே]
பாங்கி தலைவியை இல்கொண்டு ஏகல்:
புழைக்கால் நறுங்கு வளைச்செவ்விப் போதும் புயல்அகன்ற
குழற்கான மவ்வலும் கொய்தனம் ஆயின் கொடியஅன்னை
அழல்கால் விழிதுயில் நீத்துஉண ராமுன் அடைகுவம்யாம்
கழல்கால் மதன்கணை போல்விழி யார்தம் கடிமனைக்கே.
|
|
|
|