[துளையுள்ள தண்டுகளைஉடைய குவளைப்பூக்களும், கூந்தலுக்கு ஆன முல்லைப்பூக்களும் கொய்துவிட்டோம் ஆதலின் அன்னையின் தீக்கண்கள் உறக்கம் நீங்காமுன் மலர்விழி யார் காவல் புரியும் நம் கடிமனையைச் சென்று அடைந்து விடுவோம்.]
பாங்கி தலைவனை வரவு விலக்கல்:
நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லைஅன்ன
வில்பகைத்து ஓங்கும் புருவத்து இவளின்மெய் யேஎளிதே
வெற்பகச்சோலையின் வேய்வளர்தீச் சென்றுவிண்ணின்நின்ற
கற்பகச் சோலை கதுவும்கல் நாடஇக் கல்அதரே.
எனவும்,
[மலையிடைச் சோலையில் உண்டான மூங்கிலில் பிறந்து வளரும் தீ வானிலுள்ள கற்பகச்சோலையைச் சென்று பற்றும் கல்நாடனே! சூரியன், சந்திரன், அக்கினி என்ற முத்தேவரையும் முக்கண்களாக உடைய சிவபெருமானின் தில்லையை அன்ன, வில்போன்ற புருவமுடைய இவள் பொருட்டாக, இக்கல்வழி உனக்கு எளிதாம் ஆயினும், இனித்தொடர்ந்து நீ வரற்பாலை அல்லை.]
பைவாய் அரவுஅரை அம்பலத்து எம்பரன் பங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்சிற்றிடைக்கொடியை
மொய்வார் கமலத்தின் முற்றிழை இன்றுஎன்முன்னைத்தவத்தால்
இவ்வாறுஇருக்கும்என்றே நிற்பது என்றும்என் இன் உயிரே.
[அரவை அணிந்த இடையை உடைய சிவபெருமானுடைய கயிலையில் உள்ள செவ்வாயினையும் கருங்கண்களையும் பெரிய மூங்கில்போன்ற தோள்களையும் சிறிய இடையையும்
|
|
|
|