446                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     உடைய கொடிபோல்வாள் ஆகிய தாமரையில் வாழும் திருமகளாகிய
 இத்தலைவி என் முன்   நல்வினையால் யான் எய்தலாம் வண்ணம் இன்று
 இவ்வாறு குறமகளாக இருப்பதைக் கருதியே  என்உயிர் நிலைத்துள்ளது.
 இவளை யான் எவ்வாறு பிரிந்து வரையுந்துணை ஆற்றியிருத்தல் கூடும்?]

     தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தல்:

  இடிக்கொத்து ஒளிரும் இலங்குஎயிற்று ஆளி இபமருப்பை
  ஒடிக்கத் திரியும் உழுவைஅஞ் சாரல் ஒருதனியே
  வடிக்கச் சுடர்வடி வேல்மன்ன நீசெல் வழிக்குஇரங்கும்
  கொடிக்குப் படர்கொம்பு கூடிநின் சாரல் குறித்தகொம்பே.

அம்பி. 217 

 எனவும்,

     [வேலவ! இடிபோல முழங்கும் ஒளிவீசும் பற்களை உடைய யாளிகள்
 யானைகளின்  மருப்புக்களை ஒடிப்பதற்கு அவற்றைத் தேடித் திரியும்
 சாரலிலே நீ திரும்பிப்போம் வழி கருதி   வருந்தும் தலைவியது
 துயர்நீங்க, நீ உன் ஊர் சேர்ந்தவுடன் உன் ஊதுகொம்பினை ஊதி
 ஏதமின்றிச் சேர்ந்ததைக் குறிப்பிடுவாயாக.]

     திருமகள் புணர்ந்தவன் சேறல்:

  இருங்குன்று அன்னமதில் எம்பதிக்கு ஏகல் எளிதுசெம்மை
  தரும்குங்குமமுலைத்தையல் நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
  கருங்குஞ் சரஇனம் வெண்சிங்க ஏறுஅஞ்சும் கங்குலில்எம்
  மருங்கும் சுடர்விளக் காம்மட வார்குழை மாணிக்கமே.

தஞ்சை 189 

 எனவும் வரும்.

     [குங்கும முலைத்தோழியே! தஞ்சைவாணன் மலையிலே யானைகள்
 ஆண்சிங்கத்திற்கு அஞ்சும் இரவிலே, எனக்கு உருவெளியாகக் காட்சி
 வழங்கும் தலைவி அணிந்துள்ள