குழையில் உள்ள மணிகள் நல்ல வெளிச்சத்தை எனக்கு நாற்புறமும் வழங்கும் ஆதலின், மலைபோன்ற மதில்களை உடைய எம்ஊருக்குச செல்லுதல் எனக்கு மிகஎளியசெயலே.]
உரையிற் கோடலால், தலைமகன் நெறியினது எளிமை கூறலின் பின் பாங்கி இரவுக்குறிக்கு உடன்படலும், நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலின்பின் பாங்கி இரவுக்குறி ஏற்பித்தலும், தலைவியைக் குறியிடத்து எதிர்ப்படுதலின் பின் சார்தல் பயனாகப் புகழ்தலும் வரப்பெறும்.
பாங்கி இரவுக்குறிக்கு உடன்படல்:
கூளி நிறைக்கநின்று அம்பலத் தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிறைத்த சுடர்முடி யோய்இவள் தோள்நசையால்
ஆளி நிறைத்து அடல் ஆனைகள் தேரும் இரவின்வந்து
மீளி உரைத்தி விளையேன் உரைப்பதுஎன் மெல்லியற்கே.
[கூத்தின் சுவையால் பேய்களும் போகாது நிறைந்து நிற்க அம்பலத்து ஆடுவான் திருவடிக்கண் உண்டாகிய தூளிபடிந்த சுடர்முடியோய்! ஆளிகள் வரிசையாகக் கூடியானைகளைத் தேடும் இரவின்கண் வந்து மீளுதலைச் சொல்கின்றாய்! யான் தலைவியிடம் இதனுக்கு உடன்படுவாய் என்பேனோ? உடன்படாது ஒழிவாய் என்பேனோ?]
பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல்:
மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்குஅப்பால்
செலஅன்பர்க்கு ஓக்குமசிவன்தில்லைக் கானலில்சீர்ப்பெடையோடு
அலவன் பயில்வது கண்டுஅஞர் கூர்ந்துஅயில் வேல்உரவோன்
செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன தாம்கொல்மன் சேர்துயிலே.
|
|
|
|