448                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [மும்மலங்களுக்கு இருப்பிடமான உடல் எடுக்கும் பிறப்பை போக்கித்
 திருமால்   முதலானவருக்கும் மேம்பட இருக்கும் வாய்ப்பை அடியாருக்குத்
 தரும் சிவபெருமானுடைய தில்லையை அடுத்த கடற்கரைச்சோலையிலே,
 பெடையோடு ஆண்நண்டு மகிழ்ந்து கூடுவதுகண்டு மனம் வருந்தி, வேல்
 ஏந்திய நம் தலைவன் சென்றதை மாலையில் கண்டேன். இன்று இரவு
 அவன் எவ்வாறு கண் உறங்குவானோ? அறியேன்.]

     சார்தல் பயனாகப் புகழ்தல்:

  அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்துஅஞ் சனம்எழுதத்
  தகிலும் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்
  இகலு மவரில் தளரும்இத் தேம்பல் இடைஞெமியப்
  புகலும் மிகஇங் ஙனேஇறு மாக்கும் புணர்முலையே.

திரு. 165 

 எனவும் வரும்.

     [அகிற்புகை ஊட்டி அழகிய மலர்களைச் சூட்டிக் கண்களுக்கு மை
 தீட்டத்தக்கவள்   ஆயினும், இடைக்குப் பாரமாம் தகையில் ஒரு தனி
 வடத்தைக் கூட இத்தலைவிக்கு  அணிவித்தல் கூடாது. அங்ஙனம் ஆகவும்,
 சிவபெருமானது புலியூரை மேம்பட்டது என்று   உணராது அதனோடு
 மாறுபடுவாரைப்போன்று, தளராநின்ற இத்தேய்தலைஉடைய இடை நெரிந்து
 ஒடியப்புகினும் அதனை உணராது இப்புணர் முலைகள் மிகவும்
 விம்முகின்றன. இஃது   யாதாய் முடியுமோ?]

     இவற்றுள், இறையோன் இருட்குறி வேண்டலும், நெறியினது எளிமை
 கூறலும், அவன்நாட்டு   அணியியல் வினாதலும், பாங்கி இறைவிக்கு
 இறையோன் குறை அறிவுறுத்தலும் ஆகிய நான்கும் வேண்டற்கும்,

     பாங்கி நெறியினது அருமை கூறலும், இறைமகள் இறைவனைக்
 குறி விலக்கலும், பாங்கி   இறைவனை வரவு விலக்கலும் ஆகிய மூன்றும்
 மறுத்தற்கும்,