450 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
இரவிக்குறி இடையீட்டு வகை
518 அல்லகுறி வருந்தொழிற்கு அருமை என்றாங்கு எல்லுக்குறி இடையீடு இருவகைத்து ஆகும்.
இது நிறுத்தமுறையானே இரவுக்குறி இடையீட்டுவகை இத்துணைத்து என்கின்றது.
இ-ள் அல்லகுறியும் வருந்தொழிற்கு அருமையும் என இரண்டு் வகையினை உடைத்து, இரவுக்குறி இடையீடு என்றவாறு.
"குறிஅல்ல" என்பது அல்லகுறி என முன்பின்னாகத் தொக்கு நின்றது, கடைக்கண்போல. அதுதான் தலைமகனால் நிகழ்த்தப்படும் புள் எழுப்பல் முதலியன பிறிது ஒன்றான் நிகழ்த்தப்படுதலாம் என்றவாறு. 146
விளக்கம்
கடைக்கண் என்பது கண்கடை என்பன கண்ணினது கடை என்றபொருளில் முன்பின்னாகத் தொக்கதொகை;
இஃது அல்லகுறி என்பது "குறி அல்ல" என்பதன் முன்பின்னாகத் தொக்க அளவிற்கே எடுத்துக்காட்டு ஆகும்.
ஒத்த நூற்பாக்கள்
"இருவகைக் குறிபிழைப்பு ஆகிய இடத்தும்."
தொ. பொ. 107
"வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும் குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்