519 இறைவிக்கு இகுளை இறைவரவு உணர்த்துழித்
தான்குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும்1
பாங்கி தலைவன் தீங்குஎடுத்து இயம்பலும்2
புலந்துஅவன் போதலும்3 புலர்ந்தபின் வறுங்களம்
தலைவிகண்டு இரங்கலும்4 தன்துணைக்கு உரைத்தலும்5
தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும்6
இறைவன்மேல் பாங்கி குறிபிழைப்பு ஏற்றலும்7
இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றலும்8
அவள்குறி மருண்டமை அவள்அவற்கு இயம்பலும்9
அவன்மொழிக் கொடுமைசென்று அவள் அவட்கியம்பலும்10
என்பிழைப்பு அன்றுஎன இறைமகள் நோதலும்11
தாயும்12 நாயும்13 ஊரும்துஞ்14 சாமையும்
காவலர் கடுகலும்15 நிலவுவெளிப் படுதலும்16
கூகை குழறலும்17 கோழிகுரல் காட்டலும்18
ஆகிய கிளவி அப்பதி னெட்டும்
இரவுக் குறிஇடை யீட்டது விரியே