தான்குறி மருண்டமை தலைவிஅவட்கு உணர்த்தலும்
சேடி இறைவன் தீங்கு கிளத்தலும்
ஊடி இறைவன் ஒழிதலும் ஒண்ணுதல்
வறுங்களம் தன்னை வந்துகண்டு இரங்கலும்
நறுந்துணர் அலர்க்குறி நாட்டம்உற்று இனையலும்
உறுந்துயர் இகுளைக்கு உரைத்தலும் உறுந்துயர்
இகுளை தணித்தலும் இறைவன்மேல் இகுளை
குறிபிழைப்பு ஏற்றலும் கோதைமேல் தலைவன்
குறிபிழைப்பு ஏற்றலும் அவள்குறி மருண்டமை
அவள்அவற்கு இயம்பலும் ஆயிடைப் பாங்கி
கொற்றவன் கொடுமை குறித்தவட்கு உணர்த்தலும்
என்பிழைப்பு அன்றென்று இறைவிநோ தலும்என
ஆறிரண்டு உடன்ஒன்று அல்லகுறி விரியே."