[பகைவரை வெகுளும் கோபம்மிக்க ஆண்யானைகளை உடைய அண்ணலே! வேகமாக வீசும் காற்று அடிக்குந் தோறும் குளத்தில் மாங்கனிகள் விழும் ஓசையை எல்லாம் தலைவி உன்குறிப்பாக மனம் மகிழ்ந்துகொண்டு, தனியே வருதற்கு மனம் நடுங்கும் அரிய இருட்டில் வந்து மலர்ச் சோலையை அடைந்து பின் நின்னைக் காணாமல் அவள் வருந்திய வருத்தம் அளவிடும் தரத்தது அன்று.]
அவன்மொழிக்கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பல்:
வரும்இந்த எல்லையின்வல்லை இன்றேவந்து வைகுஇருள்மாந்
துருமம் தரும்கனி எல்லாம் தொலைத்தும் துணைபிரியா
வரும்அந்தஅன்னங்கள் சேக்கைகொள்ளாமல் அழுங்குவித்தும்
தெருமந்துநின்றேவிட்டேன் என்பரால் அன்பர்சேயிழையே.
[தலைவியே! வழக்கம்போல வரும் மனை இகந்த இல்வரை இகவாத இரவுக்குறியிடத்திற்கு விரைவாகவந்து தங்கி இருட்டில் மாஞ்சோலையில் உள்ள கனிகளை எல்லாம் உகுத்துத் துணை பிரியாத அன்னங்களை எல்லாம் கூட்டில் அமைதியாக இருக்க ஒட்டாது வருத்தியும், உங்கள் வருகையைக் காணாமல் மனம் சுழன்று நின்றேன் என்று தலைவன் கூறுகின்றான்.]
என்பிழைப்பு அன்றுஎன இறைமகள்நோதல்:
கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சிலமே
எம்இல் அயலது ஏழில் உம்பர்
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
|
|
|
|