[எம்வீட்டின் அண்மையில் உள்ள ஏழில்மலையின் உச்சியில் உள்ள மயிலடிபோன்ற பிளவுபட்ட இலைகளையும் பெரிய கொத்துக்களையும் உடைய நொச்சியின் கிளைகளிலிருந்து கழன்று விழுந்த பூக்கள் விழும் ஓசையைக் கேட்டவாறே, பெரிய இவ்வூரவர் யாவரும் உறங்கியபின்னும், நான் "இவ்வோசை தலைவன் செய்த குறியோ? அன்றோ?" என்று ஐயுற்றவாறே இரவு முழுதும் உறங்காதிருந்தேன்.]
"உரைபெற வகுத்த" என்ற மிகையானே, பெருந்தகை நிலைமை கூறலும் வரப்பெறும். அது,
கனைஇருள் வந்து குறிபிழைத் தார்சிறு காலையில்நம்
மனையிடை வந்துவிருந்தினன் என்னவிருந் துஎன்றுஅன்னை
புனையிழை நீசென்று போற்றுகஎன் றாளன்னை போற்றுகஎன்ற
நினைவுஅறி யாதுசென் றேன்அகன் றார்அவர் நீடுஉயிர்த்தே
[செறிந்த இருளில் வந்து குறிபிழைத்த தலைவன்விடியற்கண் நம் வீட்டிற்குத்தான் விருந்தினன் என்றபெயரால் வந்தானாக, என்னை அழைத்து விருந்தினனை உபசரிக்குமாறு அன்னைகூற, அன்னை "விருந்தோம்புக" என்றுசொன்ன அவள் கருத்தை அறியாது தலைவனை நோக்கி யான் சென்ற அளவில் அவன் இரவுக்குறி பிழைத்ததைக் குறிப்பால் அறிவுறுத்துவான் போலப் பெருமூச்சு விட்டுச்சென்றான்.]
மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றோடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
|
|
|
|