ஓங்குஅண்ணல்வெம்பகடு உந்திவந்தாரை உடன்றுதும்பைத்
தேம்கண்ணிசூடிச்செருவென்ற வாணன்தென்மாறைமின்னே
தாம்கண் அனையர் தமைப்பிரிந் தோநம் தனிமைகண்டோ
நாம்கண் உறங்கினு மோஉறங் கார்கள் நகரவரே.
[யானைப்படை செலுத்திவந்தவரைத் தும்பைமாலை சூடி வென்ற வாணன் தென்மாறையில் உள்ள தோழியே! இவ்வூரார் தத்தம் கண்போன்ற துணைவரைப் பிரிந்தோ, நம் தனிமை கண்டோ, நாம் உறங்கினாலும் தாம் உறங்காது உள்ளனர்.]
புயல்கண் ணியதலைப் பூகமென் பாளைப் புதுமதுநீர்
வயற்கண் நிறைதஞ்சை வாணன்தென் மாறையில் வஞ்சிஅன்னாள்
கயற்கண் இணைஅஞ்சி நீர்மல்க காவலர் கைப்பறையின்
செயல்கண் இணைஅல்ல வோபடு கின்றன திண்கடிப்பே.
[வான் அளாவிய கமுக மரத்துப் பாளைகளிலிருந்து வடியும் தேன் வயலின்கண் நிறையும் தஞ்சைவாணன் மாறைநகரில், தலைவியின் கயல்போன்ற கண்கள் அஞ்சி நீர் மல்குமாறு, ஊர்க்காவலர் கைகளில் உள்ள பறைகளின் கண்கள் குறுந்தடியால் அடிக்கப்படுகின்றன. அடிபடுவார் ஒருவராக, நீர் உகுப்பார் பிறராதல் என்ன வியப்போ!.]
கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்
இரும்புலிக் குருளையில் தோன்றும் காட்டிடை
|
|
|
|