எல்லி வருநர் களவிற்கு 
	     நல்லை அல்லை நெடுவெண் நிலவே. 	 
		     [நிலவே! வேங்கைப்பூ விழுந்த பாறையைப் போலப் புலிக்குட்டி  தோற்றமளிக்கும் இரவில்  இரவுக்குறிக்கண் தலைவர் களவில்  வருவாராகவும், நீ ஒளிவீசி அவர் புலிக்குட்டியை  வேங்கைப்பூ விழுந்த  பாறையாகக் கருதி மயங்குமாறு செய்வதால், நற்பண்பு உடையை ஆகாய்.]  
  நம்பேறு உடைமைஇருக்கின்றவா கடல்ஞாலத்து உள்ளோர் 
  தம்பேறு எனவந்த சந்திர வாணன் தரியலர்போல் 
  வம்புஏறு கொங்கை மயில்இயல் நாம்அஞ்ச மன்றமராம் 
  கொம்புஏறி நள்இருள் வாய்க்குழ றாநின்ற கூகைகளே.  	
		     [மயிலனையாய்! உலகவர் செய்த பாக்கியம்போல அவதரித்த சந்திரன்  மகனாகிய  வாணனுடைய பகைவரைப்போல நாம் அஞ்சுமாறு,  மன்றத்திலுள்ள மராமரக் கிளையில் ஏறி  நடுஇரவில் கோட்டான்கள் கத்தி,  நாம் அச்சத்தால் இரவுக் குறிக்குச் செல்ல இயலாமல்  செய்கின்றன. நம் பேறு  அமைந்திருக்கும் நிலை வருந்தத்தக்கது.]  
  மன்பதை தாம்உய்ய வந்தருள் வாணன்தென் மாறைவெற்பர் 
  கொன்பதி வேல்வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் 
  என்பது தேறி இடைஇருள் ஊரை எழுப்பும்வெம்முள் 
  பொன்பதி தாள்வளை வாய்ச்செய்ய சூட்டுவன் புள்ளினமே. 	 
 |   
  |  
  
							 | 
						 
					 
				 |