521 பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
அருமறை செவிலி அறிந்தமை கூறலும்1
தலைமகன் வருந்தொழிற்கு அருமை சாற்றலும்2
தலைமகன் ஊர்க்குச் செலவு ஒருப் படுதலும்3
பாங்கி இறைவனைப் பழித்தலும்4 பூங்கொடி
இறையோன் தன்னைநேர்ந்து இயற்பட மொழிதலும்5
கனவுநலிபு உரைத்தலும்6 கவின்அழிபு உரைத்தலும்7
தன்துயர் தலைவற்கு உரைத்தல் வேண்டலும்8
துன்புறு பாங்கி சொல்எனச் சொல்லலும்9
அலர்பார்த்து உற்ற அச்சக் கிளவியும்10
ஆறுபார்த்து உற்ற அச்சக் கிளவியும்11