"மறைந்துஅவற் காண்டல் தற்காட் டுறுதல்
நிறைந்த காதலின் சொல்எதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்துஎதிர் கோடல்
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்
இட்டுப்பிரிவு இரங்கினும் அருமைசெய்து அயர்ப்பினும்
வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த்து அழுங்கினும்
நொந்துதெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கினும் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்
உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல
வேற்றுவரைவு வரின்அது மாற்றுதற் கண்ணும் ....
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்தும் வெருவின் கண்ணும்