"குறிப்பின் ஒப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினும் களவுஅறி வுறினும்
தமர்தற் காத்த காரணம் மருங்கினும்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்
பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்." தொல். பொ. 111
"உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்நீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றுஎனத
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவன் உன்வழிப் படினும்
தாவில் நன்மொழி கிளவி கிளப்பினும்
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே". தொல். பொ. 113
"தன்உறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் இயல்பிற்று என்ப." 118
"உடம்பும் உயிரும் வாடியக் காலும்
என்னுற் றனகொல் இவைஎனின் அல்லது
கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை." 203
"பொழுதும் ஆறும் காப்பும்என்று இவற்றின்
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
தன்னை அழிதலும் அவன்ஊறு அஞ்சலும்
இரவினும் பகலினும் நீவரல் என்றலும்
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்