470                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     புரைபட வந்த அன்ன பிறவும்
     வரைதல்வேட்கைப் பொருளஎன்ப."             தொல். பொ. 210

    "அறக்கழிவு உடையன பொருட்பயம் படவரின்
     வழக்குஎன வழங்கலும் பழித்தன்று என்ப.                  218

    "காமம் மிக்க கழிபடர் கிளவியும்
     காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும்
     ஆறுபார்த்து உற்ற அச்சக் கிளவியும்
     இரவினும் பகலினும் நீவருக என்றலும்
     கிழவோன் தன்னை வாரல் என்றலும்
     தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்
     அன்ன மரபின் பிறவும் தொகைஇத்
     தன்னை அழிந்த கிளவி எல்லாம்
     வரைதல் வேட்கைப் பொருள என்ப"            இறை. அக. 30

     முழுதும்-                                         ந. அ. 164

    "மின்இடை வருத்தம் பாங்கி வினாதலும்
     தன்மறை செவிலி அறிந்தமை சாற்றலும்
     பார்த்திபன் வருந்தொழிற்கு அருமை பகர்தலும்
     பார்த்திபன் நகர்க்குச் செலவுஒருப் படுதலும்
     இறைவனை இகுளை இயல்பழித்து உரைத்தலும
     இறைவிஆ யிடைஎதிர்ந்து இயல்பட மொழிதலும்
     கனவின் நலிவொடு கவின்அழிபு உரைத்தலும்
     இடர்தலைமகன்தனக்குஇயம்பவிரும்பலும்
     படர்உறப் பாங்கிநீ சொல்எனப் பணித்தலும்
     அலர்பார்த்து உற்ற அச்சம் தன்னுடன்
     ஆறுபார்த்து உற்ற அச்சக் கிளவியும்
     காமம் மிக்க கழிபடர் கிளவியும்
     தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்
     நெறிகுறி வெறிபிற நிகழ்த்தி விலக்கலும்
     குரவரை ஆங்குஎதிர் கொள்ளுவித் தலும்என்று
     ஓதிய வழிபயில் ஒருபத் தொன்பதும்
     மேதக வரைதல் வேட்கையின் விரியே."            மா. அ. 156]