தலைமகன் வருந்தொழிற்கு அருமை சாற்றல்:
இரும்பிழி மகாஅர்இவ் அழுங்கல் மூதூர்
விழவுஇன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகுஉடன் மடியின்
வல்உரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்
பிணிகொள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவேல் இளைஞர் துஞ்சின் வைஎயிற்று
வலம்சுரித் தோகை ஞாளி மருளும்
அரவவாய் ஞமலி குரையாது மடியின்
பகல்உரு உறழ நிலவுகான்று விசும்பில்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல்சேர்பு கனைஇருள் மடியின்
இல்எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்
வளைக்கண் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலையு ஒருநாள்
நில்லா நெஞ்சத்து அவர்வா ரலரே
அதனால்,
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து
ஆதி போகிய பாய்பரி நன்மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட்டு அன்ன
பல்முட் டின்றால் தோழிநம் களவே. அக. நா. 122
[கள் குடிக்கும் மக்கள் மிக்க ஆரவாரம் உடைய இவ்வூரார் திருவிழா இல்லாத நாள்களிலும் கூட முன்யாமத்தில் உறங்க மாட்டார்கள்; கடைத் தெருவில் உள்ளாரும் ஊராருள் ஏனையரும் உறங்கினாலும், கடுஞ்சொல் கூறும் செவிலி உறங்
|
|
|
|